Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

மே – 25 உலக தைராய்டு தினம்

மே – 25 உலக தைராய்டு தினம்

மே – 25  உலக தைராய்டு தினம் முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு உலகளவில் தைராய்டு மற்றும் கண்ணுக்குப் புலனாகாத அறிகுறிகளுக்கான ஒரு தினத்தை அனுசரிப்பதற்காக ஐரோப்பிய தைராய்டு மன்றம் (ETA – European Thyroid Association) மற்றும் அமெரிக்க தைராய்டு மன்றம் ஆகியவை கூட்டு சேர்ந்தன. 2009 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் தைராய்டுக்கான தினமாக மே 25 ஆம் தேதி உலக தைராய்டு தினம் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் […]

Read More

மே – 25 காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம்

மே – 25  காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் இத்தினம் மே 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதே தினம் அமெரிக்காவின் “காணாமல் போன குழந்தைகளுக்கான தேசிய தினமாக” ரொனால்டு ரீகனால் 1983-ல் அறிவிக்கப்பட்டது. இது காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான சர்வதேச மையம் (ICMEC – International Centre for Missing and Exploited Children) மற்றும் அமெரிக்காவின் காணமால் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான […]

Read More

மே – 24 மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்

மே – 24  மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினம் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கு 3-ஐ எட்ட மகப்பேறியல் புரை தடுப்பு மற்றும் மருத்துவமுறை பங்களிக்கிறது. இந்தக் கூற்றில், தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியமானதாகும். 2013 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மக்கள்தொகை நிதியானது மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தை அனுசரிக்கிறது. 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது : “யாரும் இதிலிருந்து விடுபடாமல் […]

Read More

மே – 23 உலக கடல் ஆமைகள் தினம்

மே – 23  உலக கடல் ஆமைகள் தினம் 2000 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆமைகள் மீட்டெடுப்பு (American Tortoise Rescue) நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடல் ஆமைகள் மற்றும் நில ஆமைகள் குறித்த புரிதலை அதிகரிப்பதற்காக மற்றும் அவற்றிற்கு மதிப்பளிப்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் மனித நடவடிக்கைகளின் மூலம் கடல் ஆமைகள் உயிர் வாழ மற்றும் வளர்ச்சி அடைய இத்தினம் ஊக்கப்படுத்துகிறது. 1990 ஆம் […]

Read More

மே – 22 சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்

மே – 22  சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் ஐ.நா. ஆனது பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் புரிதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக மே 22 ஆம் தேதியை சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினமாக அறிவித்தது. 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான 25 ஆண்டுகால நடவடிக்கைகள்” என்பதாகும்

Read More

மே – 21 சர்வதேச கலாச்சார பன்முகத்தன்மைக்கான பேச்சு வார்த்தை மற்றும் வளர்ச்சி தினம்

மே – 21  சர்வதேச கலாச்சார பன்முகத்தன்மைக்கான பேச்சு வார்த்தை மற்றும் வளர்ச்சி தினம் 2001 ஆம் ஆண்டு கலாச்சார பன்முகத்தன்மை மீதான உலகளாவிய பிரகடனத்தை யுனெஸ்கோ ஏற்றுக் கொண்டது. 2002 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொதுச் சபையானது மே 21 ஆம் தேதியை சர்வதேச கலாச்சார பன்முகத் தன்மைக்கான பேச்சுவார்த்தை மற்றும் வளர்ச்சி 1991 ஆம் ஆண்டு மே 21 அன்று இந்தியாவின் ஏழாவது பிரதமரான ராஜீவ் […]

Read More

மே – 20 உலக தேனீக்கள் தினம்

மே – 20  உலக தேனீக்கள் தினம் 18 ஆம் நூற்றாண்டில் ஸ்லோவேனியாவில் நவீன தேனிக்கள் வளர்ப்பு முறைகளின் முன்னோடியான அன்டோன் ஜன்சா என்பவரின் பிறந்த தினத்துடன் மே 20 தினம் ஒன்றிப் பொருந்துகிறது. 2016 ஆம் ஆண்டில் தேனீ வளர்ப்பாளர் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பான அபிமோண்டியா மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO – Food and Agriculture Organization) ஆகியவற்றின் உதவியுடன் ஸ்லோவேனியா குடியரசினால் இந்த […]

Read More

மே – 20 உலக அளவியல் தினம்

மே – 20  உலக அளவியல் தினம் 1875 ஆம் ஆண்டு மே 20 அன்று மீட்டர் உடன்படிக்கையில் 17 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதைக் கொண்டாடும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. மீட்டர் உடன்படிக்கையின் உண்மையான நோக்கம் உலகளவில் அளவீடுகள் சீரான அளவில் இருப்பதாகும். இந்த அளவீடுகள் 1875 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல தற்காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தற்பொழுது உலக அளவியல் தினமானது சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் […]

Read More

மே – 17 உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்

மே – 17  உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் இது எச்ஐவி தடுப்பு விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினமானது 1997 ஆம் ஆண்டு மோர்கன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் தொடக்க உரையிலிருந்துத் தொடங்கியது. முதலாவது உலக எய்ட்ஸ் தடுப்பு தினமானது 1998 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையின் நினைவாக அனுசரிக்கப்பட்டது.

Read More

மே – 17 சர்வதேச அருங்காட்சியக தினம்

மே – 17  சர்வதேச அருங்காட்சியக தினம் இத்தினம் 1977 ஆம் ஆண்டு முதல் அரசு சாரா, நிரந்தர நிறுவனமான சர்வதேச அருங்காட்சியக ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “அருங்காட்சியகங்களை உயர் அளவில் இணைப்பது : புதிய வழிமுறைகள், பொதுமக்கள்” என்பதாகும்

Read More