Home
மே - 20 உலக தேனீக்கள் தினம்

மே – 20 உலக தேனீக்கள் தினம்

மே – 20 

உலக தேனீக்கள் தினம்

18 ஆம் நூற்றாண்டில் ஸ்லோவேனியாவில் நவீன தேனிக்கள் வளர்ப்பு முறைகளின் முன்னோடியான அன்டோன் ஜன்சா என்பவரின் பிறந்த தினத்துடன் மே 20 தினம் ஒன்றிப் பொருந்துகிறது.
2016 ஆம் ஆண்டில் தேனீ வளர்ப்பாளர் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பான அபிமோண்டியா மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO – Food and Agriculture Organization) ஆகியவற்றின் உதவியுடன் ஸ்லோவேனியா குடியரசினால் இந்த தினத்தை கடைபிடிப்பதற்கான பரிந்துரை செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டு உலக தேனீக்கள் தினத்தின் பரிந்துரையானது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 40வது பதிப்பின் போது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையானது மே 20 ஆம் தேதியை உலக தேனீக்கள் தினமாக ஒருமனதாக அறிவித்தது.
2018 ஆம் ஆண்டு மே 20 அன்று முதன்முறையாக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.

Posted in Uncategorized
www.dailytamilcalendar.com